உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிரிவெஹெர விகாராதிபதியுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
42 பார்வைகள்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு நேற்று விஜயம் செய்து விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விஹாராதிபதியும், ருஹுனு மாகம்பட்டுவவின் பிரதம சங்கநாயக்கருமான வண. கோபவக்க தம்மிந்த நாயக்க தேரரை நலம் விசாரித்து, அவரிடம் ஆசி பெறுவதற்காகவே அமைச்சர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும், தேசிய சுகாதாரத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விகாராதிபதியுடன் அமைச்சர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினருக்கு நாயக்க தேரர் ஆசி வழங்கி, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்.

இச்சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “நாட்டினதும் மக்களினதும் செழிப்புக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் மகா சங்கத்தினரின் சமூகப் பொறுப்பைக் கருத்திற்கொண்டு வணக்கத்திற்குரிய தேரர் வழங்கிய அறிவுரைகளும் ஆலோசனைகளும், அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன” என்று குறிப்பிட்டுத் தனது நன்றியறிதலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். என். டி. ஹெரத் உட்படப் பல முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0