உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்


யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு, முதியவர் தங்கியிருந்த வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்நுழைந்த கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உட்பட சுமார் 30 பவுண் நகைகளையும், 4 இலட்சம் ரூபா ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது முகங்களைத் துணியால் மூடிக்கட்டி வந்திருந்த கொள்ளையர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களை அடித்து நொருக்கிய பின்னரே தமது கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

மேலும், வீட்டில் கொலை மற்றும் கொள்ளைக்கான தடயங்கள் எவையும் சிக்காமல் இருக்கக் கையுறைகளை அணிந்து செயற்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அங்கிருந்து தப்பிச் செல்லும்போது பொலிஸ் மோப்ப நாய் தங்களைச் சுவடு பிடித்துக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, வீடு முழுவதும் பெருமளவு மிளகாய்ப் பொடியைத் தூவிப் பொலிஸாரைத் திசைதிருப்பவும் முற்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார், இன்று அதிகாலை இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0