உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி ஊடாகப் பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாடசாலை நிர்வாகங்களின் உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பில், யாழ். நகரப் பகுதியில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரங்களை நடுதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு யாழ். நகர வீதிகளின் வழியே சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, நகரத்தின் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களால் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

கலை வடிவங்கள் ஊடாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் மக்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தமை பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0