மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு
இராம பிரானால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன் உதவி வண்ணக்கராக உதயகுமார் சுவேந்திரகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று காலை முதல் மாலை 3.00மணி வரையில் நடைபெற்றது
இத் தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் முன்னிலையில் நடைபெற்றது.
இதனடிப்படையில் மாலை 3.00மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் முடிவுகள் பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கர் தெரிவுசெய்வதற்காக வாக்களிப்பதற்காக 1487பேர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 768 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.
39வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.729வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.
இதனடிப்படையில் வண்ணக்கர் தேர்வுக்கான போட்டியில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தி.விக்ரமன் அவர்கள் 615வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றதாகவும் கும்பம் சின்னத்தில் போட்டியிட்ட சிவகுரு உமாகேசன் 114வாக்குகளைப்பெற்றாதாக தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம அறிவித்தார்.
அத்துடன் உதவி வண்ணக்கர் தேர்தலில் 1487பேர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 768 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. 45வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.723வாக்குகள் செல்லுபடியானவாக்குகளாக இருந்தன.
மயில் சின்னத்தில் போட்டியிட்ட உதயகுமார் சுவேந்திரகுமார் அவர்கள் 665வாக்குகளைப்பெற்றதுடன் ஓம் சின்னத்தில் போட்டியிட்ட சுகுமார் லக்ஸ்மன் அவர்கள் 158வாக்குகளைப்பெற்றுள்ளார்.
இதேநேரம் எந்த தேர்தலும் இன்று கோட்டைமுனை ஆதிசைவ வேளாளர் குல வண்ணக்கராக கந்தலிங்கம் புவனச்சந்திரா அவர்களும் உதவி வண்ணக்கராக இராசசிங்கம் லோகேஸ்வரன் அவர்களும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.