உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கற்கோவளத்தில் சம்பு புற்தரையில் தீப்பரவல் – துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள்.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் இயற்கையாக வளர்ந்திருந்த சம்பு புல்லில் தீடீர் தீ பற்றியநிலையில் 2:30 மணி நேர முயற்சியில் தீ கட்டுக்குள் கொண்டுவரபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

இன்று பிற்பகல் 7:00 மணியளவில் கற்கோவளம் கடற்கரை பகுதியில் கரையோரமாக வளர்ந்துள்ள சம்பு புற் தொடர் பகுதியில் தீப் பரவியது தொடர்பாக பிரதேச மக்களால் வட்டார பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்து தீயை அணைப்பதற்காக தண்ணீர் தாங்கிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடனடியாகவே பிரதேச சபையின் செயலாளர் தண்ணீர் தாங்கியை அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் பிரதேச மக்களுடன் சேர்ந்து பிரதேச உறுப்பினரும், பிரதேச சபை ஊழியரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இடைவேளை வடமாராட்சி வடக்கு பிரதேச செயலruடனும் தொடர்பு கொண்ட பிரதேச உறுப்பினர் அவரிடமும் உதவி கோரியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு கிராம சேவகரும் சென்றிருந்தார்.

மக்கள், பருத்தித்துறை போலீசாரும் சேர்ந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் கடற்படையினரும் தங்களுடைய நீர் தாங்கியை கொண்டு சென்று தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை முழுமையான கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளனர்

எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்த நிலைமைகளை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கு வடமராட்சி பிரதேசத்திற்கு நிரந்தர தீயணைப்பு வாகனம் ஒன்று அவசியமாக தேவை பாடு இருப்பதானல் தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0