உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அநுர அரசின் லட்சணத்தை வீதிக்குச் சென்று மக்களிடமே கேளுங்கள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் லட்சணங்கள் குறித்துத் தான் ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடியாக வீதிக்குச் சென்று மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் மூலம் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகின்றது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் உள்ளக கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது,

“கட்சியில் தற்போதைக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை.

எனினும், கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகள் குறித்தே இந்தச் செயற்குழு கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது” என அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் களத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பும், சஜித் பிரேமதாஸவின் தரப்பும் வெவ்வேறு உத்திகளுடனும், புதிய ‘மூளைகளுடனும்’ புதிய கூட்டணிகளை அமைப்பதற்குத் தயாராகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

“எந்தத் தரப்பு எந்த உத்தியைப் பயன்படுத்திப் புதிய கூட்டணிகளை அமைத்தாலும் அல்லது மாற்றங்களைச் செய்தாலும், அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

இறுதியாக, தேர்தல் காலத்தில் மக்கள் வாக்களிக்கும் போது எவற்றைக் கருத்தில் கொள்வார்கள் என்பது குறித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ,

“மக்கள் எப்போதும் நாட்டின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குவார்கள். அதேபோன்று, நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையும் சிந்திப்பார்கள்.

அத்துடன், தற்போதைய நிகழ்காலச் சூழலையும் மிகத் தெளிவாகக் கருத்தில் கொண்டே மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள்.

எனவே, இந்த முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தேர்தல் காலத்தில் சரியான முடிவை எடுப்பார்கள்” என மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0