உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இங்கு முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்,

“முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே நேற்று  நீதிமன்றத்தில் பிணை கோரியிருந்த போது, அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த கால மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது கூட அவர்களுக்கு எந்தவொரு உடல்ரீதியான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை. ஆனால், சுரேஷ் சலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தமிழ் டயஸ்போராவை (புலம்பெயர் தமிழர்) மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்துப் பேசிய அவர்,

“Rebuilding Sri Lanka கணக்கில் உள்ள நிதி, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அரச அதிகாரிகள் தமக்குரிய தீர்மானங்களை எடுக்கப் பயப்படுவதால் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முன்கூட்டிய தயார்படுத்தல்கள் இருந்தன. ஆனால், இன்று உரிய திட்டமிடல் இல்லாததால் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்கள் மண்ணோடு மண்ணாகி வருகின்றன. இயற்கை அனர்த்தங்களைக்கூட மேலாண்மை செய்ய முடியாத ஒரு தோல்வியடைந்த அரசாங்கமாகவே தற்போதைய ஆட்சி காணப்படுகிறது.” – என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள,

“தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைமை, ‘அந்தரேயின் தோள் மீது கல்லை வைத்த கதை’ போன்றதாக மாறியுள்ளது. தனது சகாக்களுடன் ஆட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் திணறி வரும் ஜனாதிபதி, நாட்டை ஒரு எரிமலை மீது அமர வைத்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி டொலர் ஒன்றின் மதிப்பு 340 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசின் நெருங்கிய நண்பர்கள் டொலர்களை தமக்கேற்றவாறு பயன்படுத்த இடமளித்ததன் விளைவாகவே, இன்று சாதாரண ஏழை மக்கள் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.” – என்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கலாசாரம் குறித்துப் பேசிய அவர், “நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அணியில், தமது பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத பேராசிரியர்களும், நீதிமன்றில் ஒரு வழக்கைக்கூட வாதாடாத சட்டத்தரணிகளும், மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குக்கூட மருந்து வழங்காத மருத்துவர்களுமே நிறைந்துள்ளனர். இவ்வாறான எந்தவொரு நடைமுறை அறிவும் இல்லாத ஒரு குழுவினரிடமிருந்து நாட்டு மக்கள் எவ்வாறு சிறந்ததொரு அரச நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0