உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வந்த, 45 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (05) வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 42 வயதுகளையுடைய சீன நாட்டவர் எனவும், அவர்கள் இருவரும் வியாபாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றையதினம் அதிகாலை 01.20 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த ‘சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்.கியூ. 469 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 4 பயணப்பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் உற்பத்தியான 30,400 சிகரெட்டுகள் அடங்கிய 152 கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன வியாபாரிகளைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்து, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0