உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சில பாடல்களைக் கொண்டு அவை ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்கு புறம்பானது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஜனாதிபதி அநுர, இலங்கையில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகாது என்றும், விடுதலைப்புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீள உருவாகும் வாய்ப்பு இல்லை என்றும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சில பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவை ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என்று வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும்.

கலை, இலக்கியம் மற்றும் இசை என்பவை மக்களின் வரலாறு, நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகப் பிரதிபலிப்புகளாகும். அவற்றை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, அவை தோன்றுவதற்கான சமூக மற்றும் அரசியல் பின்னணிகளைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காணி, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில் நியாயமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாதவரை, மக்களின் உணர்வுகள், நினைவுகள் மற்றும் அவற்றின் கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து வெளிப்படுவது இயல்பான ஒன்றாகும்.

எனவே, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், எந்தவொரு தரப்பினரும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லது உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். அதுவே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0