உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நம்பி விசாரணை; ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவராது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் இதன் உண்மை வெளிவராது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் குரல்’ அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசின் பலவீனமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் ஊழல் மோசடிகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

தற்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது. சகல நெருக்கடிகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாகவே சட்ட ரீதியான தீர்வு எட்டப்படும்.

வரவிருக்கும் 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், எங்கள் தரப்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.

தற்போதைய சூழலில் சகல எதிர்க்கட்சிகளும் பொதுவானதொரு நோக்கத்துடன் இணைந்து செயற்படுவது எங்களுக்குக் கிடைத்துள்ள பாரியதொரு வெற்றியாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0