உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உலகப் போரைக் காட்டி அரசு தப்பிக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் குறித்து அரசுக்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா அல்லது இந்த நெருக்கடிகளை அவர்களால் சரியாக நிர்வகிக்க முடிகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மட்டுமே நம்பி அரசு இயங்கி வருகின்றதே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் எதையும் அது முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், புதிய முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்குள் வரவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

“தனியார் துறையின் முதலீடுகள் முடங்கியுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயுள்ளன. பொதுமக்கள் உணரும் வகையில் எந்தவொரு சாதகமான மாற்றமும் பொருளாதாரத்தில் தெரியவில்லை. மாறாக அரசின் வெற்றுப் பேச்சுக்கள் மட்டுமே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு உலகளாவிய போர்தான் காரணம் என அரசு கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான், போரினால் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான் என்றார்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் கூட போரின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய சூழலைக் காரணம் காட்டி அரசு தனது நிர்வாகத் தோல்விகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

உலகில் இவ்வாறானதொரு போர்ச் சூழல் உருவாகப் போகின்றது என்பது குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று குறிப்பிட்ட அவர், இதனால்தான் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே வரவிருக்கும் நெருக்கடிகளைச் சரியாக எதிர்கொள்வதற்குத் தேவையான தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு தாங்கள் அரசை வலியுறுத்தியதாகவும் நினைவூட்டினார்.

எனினும், அரசு அதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும், அவ்வாறு திட்டமிடத் தவறியதன் மோசமான விளைவையே இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவித்து வருகின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0