உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தீ விபத்து; பலர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தத் திடீர் தீ விபத்து அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த 10 பேர் தீயில் கருகிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்ட பின்னர், சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

17 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0