உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் மறைமுக முயற்சி குறித்து, உடனடியாக விளக்கமளிக்குமாறுப பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அரசமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும்.

அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்வதாயின், அது அரசமைப்பில் செய்யப்படும் திருத்தத்தின் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசு அறியாதிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

தற்போதைய அரசு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில், புதிய அரசமைப்பு ஒன்று வரைவு செய்யப்படுவதுடன், அது நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய தற்காலிகத் திருத்தங்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கடுமையான குரலெழுப்பியது தற்போதைய அரசின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆவர்.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்திய தற்போதைய ஆட்சியாளர்கள், தங்களது கடந்தகாலக் கூற்றுகளுக்கும் தற்போது தாங்கள் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த முன்மொழிவின் மூலம் அரசு அரசமைப்பைத் தெளிவாக மீறுவதுடன், சட்ட அமைப்பின் தொடர்ச்சித்தன்மை, சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு திருத்தத்தின் மூலம் அரசு எதனை எதிர்பார்க்கின்றது? தற்போதைய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து பதவியேற்கத் தகுதியற்றவர்கள் என்றா? அல்லது ஏதேனும் இலக்கு வைக்கப்பட்ட ஒரு நபர் அல்லது சில நபர்களின் குறுகிய தேவைகளை நிறைவேற்றி, அதன் மூலம் நீதித்துறைக்கு மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துவதா? இக்கேள்விகள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களாகும்.

அதேபோன்று, அரசு இதன் மூலம் தகுதியுடைய, பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்ட நீதிபதிகளுக்கான அக்காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கித் தள்ளிப்போடுவது கடுமையான அநீதியாகும். இது அரசமைப்பின் 28ஆம் பிரிவின் கீழ் அடிப்படைப் கடமைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள (உ) உப பிரிவை தெளிவாக மீறும் செயலாகும். அதனூடாகப் பிறரின் உரிமைகளையும் பல்வேறுபட்ட சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையான அரசமைப்புத் திருத்தமொன்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டு, தங்களது சுய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாத்திரம் அரசமைப்பில் இத்தகைய திருத்தங்களைக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். சட்டத்தின் இறைமை, சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டுத் தலையீடு இத்தருணத்தில் அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்துடன் நாங்கள் முழுமையாக உடன்படுகின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடனடியாக இந்த முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும் எனவும், மக்களின் இறையாண்மைக்குச் சவால் விடுக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

53 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0