உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது, தற்போதைய அரசின் மீதான வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன,

“தேசிய பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசு மிகவும் அழகான, பிரபலமான ஒரு முன்மொழிவை முன்வைத்தது. அதுதான் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நண்பர்களிடமிருந்து கிடைக்கப்போகும் டொலர்கள் பற்றிய கதையாகும். இந்த முன்மொழிவு அண்மைய நாட்களாக மீண்டும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஆட்சிக்கு வந்து, அதன் ஒட்டுமொத்தப் பதவிக்காலத்தில் இப்போது மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த அந்தத் தாராளமனம் கொண்ட நண்பர்களை இந்த அரசாங்கம் இன்னும் சந்திக்கவில்லை. நமக்குத் தெரிந்தவரை, அந்த வழியின் ஊடாக மில்லியன் கணக்கான டொலர்கள் ஒருபுறமிருக்க, ஒரு டொலர் கூட இன்னும் நாட்டுக்குள் வரவில்லை.

இந்தப் பிரபலமான முன்மொழிவு, தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு மட்டும்தானா? இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கௌரவ அநுர திஸாநாயக்கவின் வெற்றிக்காக முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்திலும் அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்கள். தேர்தல் மேடைகளில் பொதுமக்கள் இது குறித்து அறிவற்றவர்கள் என்ற ரீதியில் அவர்கள் பேசினாலும், கொள்கைப் பிரகடனத்தில் முறையானதொரு கட்டமைப்பின் கீழ் இந்த விடயம் விவாதிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கொள்கைப் பிரகடனத்தில், அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிணைமுறி முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தார்கள். இரண்டாவதாக, பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்காக, வெளிநாட்டு இலங்கையர்களை இலக்கு வைத்து புதிய அபிவிருத்தி பிணைமுறி முன்மொழிவொன்றும் அதில் உள்ளடக்கப்படிருந்தது.

இவ்வாறானதொரு திட்டம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இதற்கு முக்கிய காரணம், இந்த அரசு மக்களுக்கு முன்வைத்த தங்களுடைய சொந்தக் கொள்கைப் பிரகடனத்தைக் கைவிட்டுவிட்டே ஆட்சியை நடத்துகிறது என்பதாகும்.

அதேபோன்று, வெளிநாட்டு இலங்கையர்களுக்கு டொலர்களை அனுப்பும் அளவுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். இந்தக் காரணங்களைத் தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசின் கடமையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0