உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்; பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவும் தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட விசேட கேள்விக்கு விடையளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்த வரை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மாணவர்களே இந்த வெசாக் கூட்டை மிகவும் அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

எனவே, நாட்டில் ஏற்பட்டு வரும் இந்த நல்லிணக்க முயற்சியைச் சீர்குலைப்பதற்காக ஏதேனும் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலா இது என்பது குறித்துப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பல கோணங்களில் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், மேலதிக விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0