கெருடாவிலில் விவசாயக் கிணறு புனரமைப்புப் பணி ஆரம்பம்..!
மக்களின் வரிப் பணத்திலிருந்து நாடு முழுவதும் 25000 மில்லியன் ஒதுக்கீட்டில் சமூக சக்தியின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமராட்சியிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கெருடாவில் வடக்கில் (J/386) விவசாயக் கிணறு புனரமைப்புப் பணி நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமராட்சி அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதில் பிரதிப் பிரதேச செயலாளர், பசுபதி தயானந்தன், திட்டமிடல் பணிப்பாளர், சமூக சக்தி தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


