உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இங்கிரிய வீதியின் கிரியெல்ல, மாட்டுவாகல முதுன்கொடுவ பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கி ஒன்றின் மூலமே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் காயமடைந்த நபர் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கிரியெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு சந்தேகநபரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0