உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாயமான வடமராட்சி மீனவர்கள்; இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வடமராட்சி கடற்பரப்பிலிருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்கள் நால்வர் தொடர்பில், விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடுதல் நடத்தியும் எவ்வித சாதகமான முடிவுகளும் கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஷ்ணன் அகிலன் தெரிவித்தார்.

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைக் கண்டறிவதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல்போன மீனவர்கள் தொடர்பாகத் துறைசார் அமைச்சர், கடற்படையினருக்கு உரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதனடிப்படையில், குறித்த பகுதி மீனவர்களின் ஒத்துழைப்புடன் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால், தேடுதல் நடவடிக்கைகள் தடைப்படாமல் இருக்கும் பொருட்டு, பாதுகாப்பான முறையில் உரிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காணாமல்போன மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசைமாறிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசேட அனுமதி பெறப்பட்டு மீனவப் படகுகள் மூலம் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டு அவை கரை திரும்பியுள்ளன. எனினும், இந்திய எல்லைக் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகுகள் எதுவும் தென்படவில்லை. இருந்தபோதிலும், காணாமல்போன மீனவர்களைக் கண்டறிவதற்காக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0