உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விபத்தில் சிக்கிய இளைஞனை தன் வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பிக்க ரணவக்க.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வெசாக் பௌர்ணமி தினமான நேற்று ரிதிகம – குருநாகல் வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த தம்பதியினரில் இளைஞன் ஒருவர் வீதியோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது, அந்த வீதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தி, காயமடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், உடனடியாகத் தனது வாகனத்திலிருந்து இறங்கி, ஆபத்தான நிலையிலிருந்த இளைஞனைத் தனது உத்தியோகபூர்வ வாகனத்திலேயே ஏற்றி, மிக விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

அவசர விபத்துகளின் போது பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் இந்த உடனடி மனிதாபிமானச் செயல் அங்கிருந்த பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0