உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். மாவட்ட எல்லே போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பெண்கள் அணி முதலிடம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்டு வரும் நடப்பு ஆண்டுக்கான விளையாட்டு விழாவில், யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பெண்களுக்கான எல்லே (Elle) போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக பெண்கள் அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இப்போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மணற்காடு சென். அன்ரனிஸ் இளைஞர் கழகம் மிகச்சிறப்பான முறையில் அணியை ஒழுங்கமைத்து இந்த வெற்றியைத் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த வடமராட்சி கிழக்கு பிரதேச பெண்கள் அணி வீரர்களுக்கும், அணியை வழிநடத்திய மணற்காடு சென். அன்ரனிஸ் இளைஞர் கழகத்தினருக்கும் பிரதேச மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட மட்டத்தில் சாம்பியனான இந்த அணி, அடுத்து நடைபெறவுள்ள தேசிய ரீதியிலான எல்லே போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளது. தேசிய மட்டத்திலும் இந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமது பிரதேசத்திற்கும் யாழ். மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0