உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

அண்மையில் தனது மருத்துவத் தேவையை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் கணிசமான நிதி ஒன்றினைத் திரட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செல்வா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் நேரில் சென்று சிவாஜிலிங்கம் அவர்களிடம் உதவித் தொகையை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

ஒரு சக மனிதனின் உயிர் காக்கும் உயரிய நோக்குடன், உள்நாட்டு வெளிநாட்டு உறவுகளை ஒன்றிணைத்து குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் முன்னெடுத்த இந்த அறப்பணி, தமிழ் பேசும் மக்களிடையே நெகிழ்ச்சியையும் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவ்வுதவி சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்குப் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

21 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0