உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது.?” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை நாங்கள் சந்திக்கச் சென்றோம். 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் எமது கட்சியுடன் கூட்டணியமைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டமையால் அவரைச் சந்திக்கச் சென்றோம்.

பிள்ளையானை நாங்கள் சந்திக்கச் சென்றமையை அறிவதற்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரான்ஸுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பதிவுப் புத்தகத்தை ஆராய்ந்திருந்தால் அதில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. குண்டுத்தாக்குதல்கள் குறித்து அரசு எடுக்கும் சகல விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது.?

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி.யின் கட்சித் தலைமையகம் தீர்மானிக்குமாயின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு? 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் இந்த அரசு நடத்துமா என்பது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

40 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0