உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது செய்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி காலி – தங்கேதர பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால், இக்குற்றத்திற்குத் துணையாக இருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, ஒரு சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 38 வயதுடைய கிராந்துருகோட்டே மற்றும் மஹவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, இதற்குத் துணையாக இருந்த மற்றொரு சந்தேகநபரை காலி பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹபராதுவ – கல்பே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவராவார்.

காலி பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

49 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0