உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குத் தம்மால் பதில் கூறவோ அல்லது பொறுப்பேற்கவோ முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய சர்ச்சைமிக்க கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரது சடலம் புதைக்கப்பட்ட துல்லியமான இடம் தனக்குத் தெரியும் என்றும், ஆனால் பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களினால் அந்த இடத்தைத் தான் ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டேன் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இக்கருத்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து ரில்வின் சில்வாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் வழங்கிய நேரடிப் பதில் வருமாறு:-
“சரத் பொன்சேகா கூறியுள்ள இந்த விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ அல்லது அரசுக்கோ எதுவும் தெரியாது. மிக முக்கியமாக, சரத் பொன்சேகா என்பவர் தற்போதைய அரசின் பிரதிநிதி அல்லர். அவர் ஒரு முன்னாள் இராணுவத் தளபதி மாத்திரமே ஆவார்.

அவர் அரசியல் அரங்கில் அவ்வப்போது இவ்வாறான பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே, தனிப்பட்ட முறையில் அவர் வெளியிடும் இத்தகைய கருத்துக்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இது குறித்து எங்களால் அரச தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவும் முடியாது.” – என்றார்.

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தற்போதைய புதிய அரசின் கீழ் இவ்வாறான பழைய போர்க்காலச் சம்பவங்களை மீண்டும் கிளறி அரசியல் இலாபம் தேட முற்படும் கருத்துக்களைத் தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஊக்குவிக்காது என்றும் ரில்வின் சில்வா இதன்போது மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

1 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0