மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!
மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று 24 ஆம் திகதி காலை அருட்தந்தை டொமினிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய தினம் திருவிழா திருப்பலி நுவரெலியா பிலக்பூல் நம் மாதா உயர் நிலை கல்லூரியின் அதிபர் அருட்தந்தை சிவந்த ரொட்ரிக்கொ அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித சூசையப்பர் திருச்சுரூப பவனி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து வாகன ஊர்தியில் வைத்து அங்கு இருந்து மக்கள் வழிபாட்டிற்காக பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகர் ஊடாக பொலிஸ் நிலைய வழியாக எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை சென்று மீண்டும் 2 ம் வீதியூடாக ஆலய வீதி வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் புனித சூசையப்பரின் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.
காலை.9.45 மணிக்கு திருவிழாவில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
