உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

LPL கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்காக ஐசிசி (ICC) முழு அங்கத்துவம் பெற்ற அனைத்து நாடுகளின் வீரர்களும், அத்துடன் சில அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் இருந்து வீரர்கள் இம்முறை பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்களில் அதிகபட்சமாக பாகிஸ்தானில் இருந்து 102 வீரர்கள் உள்ளனர்.

மேலதிகமாக மேற்கிந்திய தீவுகள் (75), தென்னாப்பிரிக்கா (66), பங்களாதேஷ் (48), நியூசிலாந்து (41), அவுஸ்திரேலியா (24), இங்கிலாந்து (15) மற்றும் இந்தியா (12) ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் பதிவு செய்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்துள்ள மொத்த வீரர்களில் 310 பேர் விசேட மதிப்பீட்டு செயல்முறைக்குப் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கமைய, அந்த வீரர்கள் ஜூன் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள LPL உத்தியோகபூர்வ பிளேயர் டிராப்ட் நிகழ்வில் உள்ளடக்கப்படுவர்.

6ஆவது முறையாக நடைபெறவுள்ள LPL கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

1 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0