உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இந்தச் சந்தேகநபர் பண மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்தார்.

பின்னர், பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சோதனையின் போது, திருகோணமலை குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இந்தச் சந்தேகநபருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, அவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகளின் படி, சந்தேகநபர் மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0