உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

‘கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின்  நெறிப்படுத்தலில்  சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் திருமதி எம்.சி. றிப்கா அன்ஸார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஐ. முவாபிக்கா  கலந்து சிறப்பித்தார்.

கலாசார அதிகார சபையின் செயலாளரும் சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். அஷ்ரப் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டதோடு,

கலாசார அதிகாரசபையின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0