உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போர் வெற்றி நாளை இனப் படுகொ*லை நாளாக பிரகடனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கையின் போர் வெற்றி நாளை, இனப்படுகொலை நாளாகப் பிரகடனப்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என்றும், அதற்கு எதிராகத் தங்களது கட்சி கடுமையாகப் போராடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
“யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வது தொடர்பில் எமக்கும் கவலை உள்ளது. மக்களின் அந்த நினைவேந்தல் உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால், அண்மையில் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் நினைவேந்தல் என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டுதான் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எமது முப்படையினர் தங்களது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த இந்த ஒற்றையாட்சி நாட்டில், பயங்கரவாத அடையாளங்களுடன் இவ்வாறு நினைவேந்தல்களை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

நாடாளுமன்றத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகி வந்துள்ள சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர். அவர்கள் இத்தகைய இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். தற்சமயம் அவர்கள், இலங்கையின் போர் வெற்றி நாளை இனப்படுகொலை தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறியே இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அவ்வாறிருக்கையில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை தினத்தைப் பிரேரிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட கேள்வி எழுப்பினார்.

அரசின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய தேசவிரோதப் பிரகடனங்களுக்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் கூட்டு எதிரணியாகத் தங்களது கட்சி மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0