உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மக்களின் காணிகளை பிடுங்கி இராணுவத்திற்கு கொடுக்க அரசு மும்முரமாக செயற்படுகிறது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மும்முரமாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டினார்.

நேற்று வியாழக்கிழமை குறித்த தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய வந்தமை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனியாருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் அடாத்தாக இராணுவ முகாம் அமைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த இராணுவ முகாம் உள்ள பகுதியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்களம் வருகை தந்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த தீர்மானத்தை மீறி காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் அடாத்தாக இராணுவ தேவைக்காக மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது.

வடக்கு, கிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இராணுவ மயமாக்கல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்காக தொடர்ந்து அதிகரித்த நிதி ஒதுக்கீடு இடம்பெறுகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் இராணுவ இருப்பை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு அதிக நிதியை செலவு செய்கிறது.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் இராணுவ வைத்தியசாலை தனியார் காணிகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு என யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கூறும் ஜனாதிபதி மக்களின் காணிகளை மக்களுக்கு தெரியாமல் அபகரிப்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0