உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 09 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிவிப்பின்படி, நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 06 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

கத்தார் எயார்வேஸ்: தோஹாவிலிருந்து அதிகாலை 2.35 மணிக்கு வந்த QR-658 மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு வந்த QR-662 ஆகிய 02 விமானங்கள்.

இத்திஹாட் எயார்வேஸ்: அபுதாபியிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு வந்த EL-394 விமானம்.

எயார் அரேபியா: ஷார்ஜாவிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு வந்த G9-587 மற்றும் அதிகாலை 4.00 மணிக்கு வந்த G9-502 ஆகிய 02 விமானங்கள்.

ஜசீரா எயார்வேஸ்: குவைத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு வந்த T9-551 விமானம்.

மேலும் 02 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, துபாயிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்வேஸின் RL-226 விமானமும், சென்னையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-1171 விமானமும் கொச்சின் நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை, புதுடில்லியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 விமானம், மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0