உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தம்பதியினர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

டிக்கோயா நகரில் வயதான தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா நகரின் பிரதான வீதியில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக இந்த கடையில் வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதியினர், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காததால், பிள்ளைகள் அது குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து கடையைத் திறந்து பார்த்தபோதே இந்த படுகொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன், உடனடியாக ஹட்டன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து இவர்களைக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0