உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்கங்களை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“சங்கங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் கடற்றொழிலாளர் சமூகம் தாயில்லாத பிள்ளைகள் போல தவித்துக்கொண்டிருக்கின்றது. அரசியல் தலையீடுகளால் நலிவடைந்துள்ள சங்கக் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தி, மக்கள் மயப்படுத்துவதே எமது முதற்கட்டப் பணியாகும்” என யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் புதிய தலைவர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசியல் தலையீடுகளால் வீழ்ந்த சங்கங்கள்
“கூட்டுறவுச் சங்கம் என்பது ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பலமாகும். வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வருங்காலச் சந்ததியினருக்கு கடலையும் சமுதாயத்தையும் பாதுகாப்பாகக் கையளிப்பதே ஒரு சங்கத்தின் உண்மையான நோக்கமாகும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அது முற்றிலும் எதிர்மாறாகவே இருக்கின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் துயர் துடைக்கும் ஒரு உன்னத நிலையில் இந்தச் சங்கங்கள் இயங்கி வந்தன. எனினும், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல்களினாலும், தேவையற்ற அரசியல் தலையீடுகளினாலும் இக்கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்டது.

அரசியல் சுயலாபங்களுக்காகச் சங்கங்கள் முடக்கப்பட்டு, மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டதால் சங்கங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

அரசியலைச் சங்கங்களுக்குள் நுழைத்து ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சீரழித்த வரலாறு கரையோர மக்கள் அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.

சங்கம் இல்லாமல் மக்கள் இயங்க முடியாது
இந்த அவல நிலையை மாற்றுவதே எமது புதிய நிர்வாகத்தின் முதல் இலக்காகும். சங்கங்களின் பங்களிப்பு இல்லாமல் மக்கள் தனித்து இயங்குவதையோ அல்லது அவர்கள் புறக்கணிக்கப்படுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மக்களுக்காக இணங்கி வேலை செய்யக்கூடிய, மக்களின் குரலாக ஒலிக்கும் வலுவான சங்கங்களை உருவாக்குவதே எமது முதற்கட்ட வேலையாகும். சங்கம் எடுக்கும் முடிவுகளின் மூலமே மக்களின் உரிமைகளும் தேவைகளும் வென்றெடுக்கப்படும்.

சட்டவிரோத தொழில்களை ஒழிக்க மக்கள் சக்தியே போதும்.

அடுத்ததாக, எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் கடற்படை, காவல்துறை, இராணுவம் அல்லது அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் சங்கம் நினைத்தால் மட்டுமே இத்தகைய சட்டவிரோதச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு கிராமப் பகுதியில் பெரும்பான்மையான மக்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரும்போது, ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்று நடக்கும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் யாராவது சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டால், அந்த கிராமத்துச் சங்கத்தின் பொதுப் பெரும்பான்மை முடிவின் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அதையும் மீறிச் செயல்படுபவர்களைச் சங்கத்தின் மூலமாகவே சட்டத்தின் முன் (நீதிமன்றத்தில்) நிறுத்த முடியும். அதை விடுத்து, அரசாங்கத்தின் மீது குறை சொல்வதாலோ அல்லது அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுவதாலோ எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே, அரசாங்கத்தையோ அரசியலையோ நம்பியிருக்காமல், எமது முதல் வேலையாகச் சங்கங்களோடு மக்களை முழுமையாக இணைத்து, மக்கள் சக்தியைக் கொண்டு எமது உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என வடமராட்சி வடக்கு சமாசத்தின் புதிய தலைவர் பிரதீபன் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0