உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிக்க இளைஞர் மாநாடு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாட்டின் போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, பிரம்மாண்டமான “போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு” ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்மாநாடு குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:-
இளைஞர்களை ஒன்றிணைக்கும் கிராமிய மட்டச் செயற்பாடு
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் இளைஞர்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவும் கிராமிய மட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கு இணையாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஜூன் 26 ஆம் திகதி இம்மாநாட்டை நடத்தவுள்ளன.

போதைப்பொருள் அபாயத்துக்கு ஆளாவதன் காரணமாக, நாட்டின் இளந்தலைமுறையினர் பாரியளவில் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான வீழ்ச்சிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது நாட்டின் எதிர்கால உழைக்கும் படையின் உற்பத்தித்திறனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த அபாயத்தை நாட்டிலிருந்து வேரோடு ஒழிப்பதற்கும், இளைஞர்களை அதிலிருந்து மீட்பதற்குமான அரசின் பிரதான திட்டமாகவே “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாட்டின் திட்டங்கள் மற்றும் முதற்கட்ட ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சுபுன் விஜேரத்ன மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0