ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (20) களு கங்கையில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 45 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே உயிரிழதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர் தொடர்பான விபரங்களைக் கண்டறிய இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.