உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று தீர்ப்பளித்தார்.

மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனைகள் அதிகரிக்கப்படின் குற்றங்கள் குறைக்கப்படும் என்ற நிலையில் இனி போதைப்பொருள் குற்றங்களுக்கு இலகு தண்டனைகள் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று நிலை உருவாகி உள்ளமை யாழ். மக்களால் வரவேற்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0