கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உஹன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் உஹன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.