உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாணவன் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு சிறுமியின் ஒரு கால் அகற்றப்பட்டது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிறிகல, கிரிமண்டல சந்திக்கருகில் இடம்பெற்ற கொடூர விபத்தில் 14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மொனராகலை பக்கத்திலிருந்து ஒப்பேகொட திசையை நோக்கி பயணித்த கப் ரக வாகனமும், ஒப்பேகொட திசையிலிருந்து மொனராகலையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மொனராகலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொனராகலை, மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியும், அவரது 47 வயதுடைய தந்தையுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்தின் காரணமாக சிறுமியின் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கப் வாகனத்தை செலுத்திய 17 வயதுடைய பருவமடையாத பாடசாலை மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மொனராகலை, மந்துருகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கப் வாகனத்தைச் செலுத்திய சிறுவனிடம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என்று மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் இலகுரக வாகனப் பயிற்சியாளர்களுக்காக வழங்கப்படும் ஓட்டுநர் பயிற்சி உரிமம் மட்டுமே இருந்துள்ளது. அந்த உரிமத்தைக் கொண்டு எந்த வகையிலும் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு சட்டபூர்வ அனுமதி இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கப் வாகனத்தின் ஓட்டுநர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனத்தைச் செலுத்தியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன் மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் ஒரு மைனர் என்பதைக் கருத்திற்கொண்டு ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0