உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இருவேறு பகுதிகளில் இரண்டு கொ*லைகள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சீதுவை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சீதுவ பொலிஸ் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர், சீதுவை பகுதியின் முக்கலங்கமுவவைச் சேர்ந்த 79 வயதுப் பெண் ஆவார்.

உயிரிழந்தவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருந்ததும், தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (21) நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஃபெர்குசன் சாலைப் பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர், மோதரா உயானா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 31 வயது நபர் ஆவார்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0