பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!
பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸ்ட்டன் தோட்டத்தில் பாரவூர்தி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது என லிந்துலை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி பாமஸ்டன் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான பாரவூர்தி இன்று 2.00 மணியளவில் தேயிலை பச்சை கொழுந்து ஏற்றிக்கொண்டு தொழிற்சாலைக்கு சென்ற வழியில் ரட்ணகிரி தோட்ட பகுதியில் சுமார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரவூர்தியில் அதன் சாரதி மற்றும் ஒரு தொழிலாளர் ஆகியோர் இருந்துள்ளனர் எனவும் விபத்தின் போது சாரதி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் பாரவூர்தி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணையை லிந்துலை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.