நயினாதீவில் 88 அடி புத்தர் சிலை திறந்து வைப்பு!
நயினாதீவு – ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன், நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு முதலில் நயினாதீவு நாக பூசணி அம்மனை வழிபட்டு, அங்கிருந்து ஊர்வலமாக விகாரைக்கு சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
