உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி சட்டத்தை மீறுகின்றதா பொலிஸ்?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“பொலிஸார் பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களைத் தடுத்து சட்ட மீறல்களுக்குத் துணை போகின்றனர்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிக்குள் இருக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்டால் சமாதானம் சீர்குலையும் எனப் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயல்வது முற்றிலும் தவறானது. இது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையாகும்” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

விகாரை தரப்பினர் சட்டவிரோதமாக வீதியை மூடி வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார், பீடாதிபதிகளுக்குப் பயந்து சட்டத்தை மீறுபவர்களைக் காக்க முயல்கின்றனர் என்றும் அவர் சாடினார்.

“சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதானம் கெடும் என விகாராதிபதி முறைப்பாடு செய்துள்ளார். இங்கே சமாதானத்தைச் சீர்குலைப்பது யார்? நான் தான் சமாதானத்தைச் சீர்குலைப்பேன் என்பது போன்ற தொனியில் இந்த முறைப்பாடு அமைந்துள்ளது. உண்மையில் சட்டத்தை மீறுபவர்களைத் தடுத்து நிறுத்துவதே பொலிஸாரின் கடமை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தடையாக இருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், பொலிஸார் நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0