உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் காலக்கெடு விதித்திருந்தார்.

பிரதேச சபை வேலியை அகற்ற முற்படுவது இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எனத் தெரிவித்து, பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்தனர். எனினும், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது என மறுத்த நீதிமன்றம், தவிசாளர் மற்றும் செயலாளரை முன்னிலையாகுமாறு இன்று அழைப்பு விடுத்திருந்தது.

இன்றைய விசாரணையின் போது வலி. வடக்கு தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பிரதேச சபையின் சட்டபூர்வமான அதிகாரம் மற்றும் பொது வீதியை மீட்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தனது வாதங்களை முன்வைத்தார்.

விகாராதிபதி இன்று மன்றில் முன்னிலையாகாத நிலையில், பொலிஸார் அவர் சார்பில் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், இந்த வழக்கின் மீதான இறுதித் தீர்ப்பு அல்லது கட்டளையை எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்குவதாகத் திகதியிட்டுள்ளார்.

பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பதில் ஏற்பட்டுள்ள இந்த சட்டப் போராட்டம், தையிட்டி பகுதியில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0