உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உந்துருளியில் தலைக்கவசம் இன்றி பயணம்; சிக்கிய பெண்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உந்துருளி ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூன்று யுவதிகள் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, நான்கு பெண்களை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீதியில் மூன்று இளம் பெண்கள் ஒரு உந்துருளியில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த காணொளி பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வைரலான காணொளி காட்சிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உந்துருளியைச் செலுத்திய பெண், அதில் பயணித்த இருவர் மற்றும் உந்துருளியின் உரிமையாளர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொலம்பகே ஆர, ஹிதிகிவுல மற்றும் உனவட்டுன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

உந்துருளியைச் செலுத்திய 23 வயதுடைய யுவதியிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மீது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, உந்துருளியில் ஒருவருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றமை, தலைக்கவசம் இன்றிப் பயணித்தமை, பொது வீதியில் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்குத் தனது உந்துருளியை வழங்கியமைக்காக அதன் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட உந்துருளி சாரதியும், உரிமையாளரும் இன்று (11) திங்கட்கிழமை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0