உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல் – பணிப்பாளர் விளக்கம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சீரற்ற வானிலை காரணமாக பழுதடைந்த, காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் தொடர்பாக அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மோசமான வானிலை காரணமாக, நேற்றுமுன்தினம் சிவகங்கை கப்பலின் இயந்திரம் பழுதடைந்தது. இக்கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

இச்சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினருக்கும் நாங்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களின் உதவியைக் கோரினோம்.

மேலும், இச்சூழ்நிலையில் பயணிகளைப் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் மீட்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பெரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்கு அனுப்பி அவர்களை பத்திரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விட்டோம்.

பயணிகள், கப்பல் பணியாளர்கள் கப்பலில் நாகப்பட்டினம் துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்தனர். அச்சப்படும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0