ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய – கஹவிட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 76 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.