உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஸ்கெலியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கடந்த சில மாதங்களாக மறே தோட்ட பகுதியில் நல்லதண்ணி நகரில் சிவனடிபாத மலைக்கு செல்லும் சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் ரக்காடு கிராம பகுதிகளில் புரவுன்லோ தோட்ட பகுதியில் மஸ்கெலியா நகரில் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல தோட்டங்களில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பலா, மாம்பழம், கொய்யா, வாழைக்குலை, பட்டர் புரூட், ஏனைய காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகள், கடைகளில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ள தின்பண்டங்கள் ஏனைய பழவகைகள் மற்றும் நீர் தாங்கிகளில் உள்ள நீரில் மூழ்கி நீராடல், வீட்டுக்குள் கழிவுகள் செய்தல் போன்ற பல சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் பலன் இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த குரங்குகளை பிடித்து வன பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக குரங்கு எச்சங்களால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என தெரியவருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0