விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவராவார்.
கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநரை உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் லொறி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.