உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

எயார்பஸ் மோசடி; மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை மே 12 ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கோரும் உத்தியோகபூர்வ கடிதம், நேற்று சனிக்கிழமை அவரது தங்காலை ‘கார்ல்டன்’ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரமே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தாலும், நேற்று சனிக்கிழமைதான் உத்தியோகபூர்வ கடிதம் அவருக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக, எயார்பஸ் வழக்கின் பிரதான சாட்சியாளராகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து அடுத்த நாள் இந்த அழைப்பாணை கடிதம் வந்துள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் எதிர்த்தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமை முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாவாரா? அல்லது அவரது தரப்பில் கால அவகாசம் கோரப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

66 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

62 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0