உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள்  தெளிவு படுத்தல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான   செயல் அமர்வு   நடைபெற்றது. 

இந்நிகழ்வு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் காணி தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் மெசிடோ நிறுவனத்தினால் நிறுவன தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், காணி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காணி உரிமை பெற விண்ணப்பித்தவர்கள், பலவந்தமாக காணிகளை இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச்செயல் அமர்வில் பங்குபற்றி பயன்பெற்றனர்.

மேலும், பல்வேறு  திணைக்களங்களினால் காணிகளை இழந்ததாகக் கூறப்படும் நபர்கள், நீண்டகாலமாக காணி உரிமை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள், இடம் பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணி உரிமை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வாழ்ந்து வரும் பொது மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

காணி தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் அரச நிர்வாக செயல்முறைகள் குறித்த அறிவை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு வழங்குவதுடன், காணி பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவதற்கான விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும்.

 அதேவேளை, காணி உரிமை தொடர்பான புதிய சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல்களும் இந்த செயலமர்வின் மூலம் வழங்கப்பட்டன.

குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக பொது மக்களுக்கும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. 

இவ்வாறான அறிவூட்டல் செயற்பாடுகள், காணி தொடர்பான பிரச்சினைகளை சட்டரீதியாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் அணுகுவதற்கும், மக்களுக்கு தகுந்த சேவைகளை இலகுவாக பெற்றுத் தருவதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செயலமர் விற்கான வளவாளராக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக காணி நிர்வாகத் துறையில் பணியாற்றிய முன்னாள் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0